2026-ல் நிசான் அறிமுகம் செய்யும் 7-இருக்கை காம்பாக்ட் MPV ‘கிராவிட்’ – 2026-ல் நிசான் பெரிய கம்பேக்..இந்திய சந்தையில் அதிரப்போகுது! - Seithipunal
Seithipunal


இந்திய சந்தையில் தனது தயாரிப்பு வரிசையை விரிவுபடுத்தும் நோக்கில், நிசான் இந்தியா ‘கிராவிட்’ என்ற புதிய 7-இருக்கை காம்பாக்ட் MPV-யை 2026 ஜனவரியில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த கார் மார்ச் 2026-க்குள் ஷோரூம்களில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிசானின் இந்திய வணிக வளர்ச்சிக்கான புதிய உத்தியின் முக்கிய மாடலாக ‘கிராவிட்’ பார்க்கப்படுகிறது.

தற்போது இந்தியாவில் ‘மேக்னைட்’ என்ற ஒரே மாடலுடன் மட்டுமே நிசான் விற்பனையில் உள்ள நிலையில், ‘கிராவிட்’ அறிமுகம் மூலம் அந்த நிலை மாற்றமடைய உள்ளது. இதனைத் தொடர்ந்து ‘டெக்டான்’ என்ற புதிய SUV மற்றும் 2027-ல் ஒரு பிரீமியம் 7-சீட்டர் SUV-யையும் நிசான் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. குறுகிய காலத்தில் பல மாடல்களை கொண்டு வருவதன் மூலம், இந்தியாவில் தனது இருப்பை வலுப்படுத்த நிசான் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

‘கிராவிட்’ MPV-யின் முழு வடிவமைப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால், வெளியான டீசர்களின் அடிப்படையில், இது நிசானின் புதிய உலகளாவிய டிசைன் மொழியில் உருவாகியுள்ளது. முன்புறத்தில் குரோம் அலங்காரத்துடன் கூடிய புதிய கிரில், பெரிய நிசான் லோகோ, நவீன ஹெட்லெம்ப்கள் மற்றும் மஸ்குலர் போனெட் வடிவமைப்பு ஆகியவை இதில் இடம்பெறும் என தெரிகிறது. இதனால், இந்த கார் பிரீமியம் தோற்றத்துடன் காட்சியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்டீரியர் அம்சங்களில், ‘கிராவிட்’ 5, 6 மற்றும் 7-சீட்டர் அமைப்புகளில் கிடைக்கும். 7-இன்ச் TFT இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 8-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங், கூல்டு ஸ்டோரேஜ் மற்றும் இரண்டாம் வரிசை இருக்கைகளுக்கு ஸ்லைடு, ரிக்லைன் வசதிகள் போன்ற நவீன அம்சங்கள் வழங்கப்பட உள்ளன.

இன்ஜின் பகுதியை பொறுத்தவரை, நிசான் கிராவிட்டில் 1.0 லிட்டர், 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படும். இது 72 hp பவர் மற்றும் 96 Nm டார்க் உற்பத்தி செய்யும். 5-ஸ்பீட் மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் வரும் இந்த MPV, இந்திய சாலைகளுக்கேற்ற வகையில் வடிவமைக்கப்பட்டதாக நிசான் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nissan to launch 7 seat compact MPV Gravit in 2026 Nissan big comeback in 2026 will rock the Indian market


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->