தமிழக போலீசாரிடம் நன்றி தெரிவித்த ஆந்திர காவல் துறையினர்..! பின்ணனி என்ன?..!! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த அய்யனார். இவர் சென்ற மாதம் ஆந்திராவில் இருந்து ஒரு மினி லாரியை கடத்தி வந்து மறைத்து வைத்துள்ளார். அய்யானார் அந்த மினி லாரியை விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 

சந்தேகத்திற்குரிய வகையில் அவர் செயல்பட்டது காவல் துறையியருக்கு தெரியவந்தது. இதனையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் அய்யனாரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் முன்னுக்கு பின் முரணாக அவர் பதிலளித்ததால் அவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். 

அப்போது இந்த மினி லாரி ஆந்திராவில் இருந்து கடத்தி வரபட்டதாக அய்யனார் ஒப்புகொண்டார். போலீசார் அய்யனாரை கைது செய்து மினி லாரியை பறிமுதல் செய்தனர். இது குறித்து ஆந்திரா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. 

வாழப்பாடி வந்த ரேணுகுண்டா போலீசாரிடம் அய்யனாரையும் மினிலாரியையும் ஒப்படைத்தனர். இளைஞரையும் மினி லாரியையும் கண்டுபிடித்து கொடுத்தற்கு ஆந்திர போலீசார் தமிழக போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem Vazhapadi Man Stolen Lorry at Andra Pradesh Tamilnadu Police Find it Andra Police Thanks to TN Police


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal