2000 கிலோ ரேஷன் அரிசி வீட்டில் பதுக்கப்பட்ட சம்பவம்.! அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை.!  - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள பொன்னம்மாபேட்டை புத்து மாரியம்மன் கோயிலுக்கு அருகில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக பறக்கும் படை வட்டாட்சியருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் டிசம்பர் 29ம் தேதி அவர் ஆய்வு மேற்கொண்ட நிலையில் பரிமளா என்பவரின் வீட்டில் இரண்டு ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், ஒரு டன் ரேஷன் அரிசியை மாவாக அரைத்து அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பரிமளா வீட்டில் ஒதுக்கப்பட்ட மாவு மற்றும் ரேஷன் அரிசி உள்ளிட்டவற்றை பொது விநியோக திட்ட பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து இருக்கின்றனர். குடும்ப அட்டை தாரர்களிடம் இருந்து ரேஷன் அரிசியை கிலோ இரண்டிலிருந்து மூன்று ரூபாய்க்கு வாங்கி இருக்கின்றனர்.

அதன் பின் அந்த அரிசி மாவை சாலையோர உணவகங்கள் மற்றும் பலகார கடைகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். அரிசி மாவை மூலப்பொருட்களாகக் கொண்டு தயாரிக்கப்படும் முருக்கு அதிரசம் இல்லா பலகாரங்களை தயாரித்தும் அவர்கள் விற்பனை செய்து வந்தனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Salem ration rice theft caught By Taluk Officer


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->