"கபடதாரி ஓ.பன்னீர்செல்வம்?" பசும்பொன் முத்துராமலிங்க தேவர் படத்துடன் சர்ச்சையை கிளப்பிய போஸ்டர்.! - Seithipunal
Seithipunal


தற்போது அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை குறித்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி இருவருக்கும் இடையே உச்சகட்ட மோதல் ஏற்பட்டு வருகிறது. 

இதற்கிடையில் இருவரின் ஆதரவாளர்களும் தங்களுக்குள் போட்டியிட்டுக் கொண்டு தனித்தனியே போஸ்டர்களை ஒட்டி தங்களது எதிர்ப்பையும், ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர். அந்த போஸ்டரில் சில பரபரப்பு வாக்கியங்கள் இடம்பெறுவதுண்டு. 

கடந்த சில வாரங்களுக்கு முன் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக சூரசம்ஹார போஸ்டர் ஒட்டப்பட்டு சேலத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இத்தகைய சூழலில், தற்போது மீண்டும் பன்னீர்செல்வத்துக்கு எதிராக சேலத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கின்றன. 

அந்த போஸ்டரில் தேசிய மக்கள் இயக்கம் என்ற பெயரில் சேலம் முழுவதும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் புகைப்படத்துடன் இடம்பெற்றுள்ளதில், "கபடதாரி" என்று ஓ.பன்னீர் செல்வத்தை குறிப்பிட்டிருப்பது அதிமுக வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

salem poster against ops


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->