ராத்திரி நேரத்தில் வந்த ஹோட்டலில் உணவு கேட்டு தகராறு.. தீ வைப்பு.. ரோட்டோர சரக்கு தாபாவால் பதறும் உணவகங்கள்.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் திமிரி கோட்டை பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில், பெரும்பாலானோர் குடும்பத்துடன் வந்து செல்வது வழக்கம். இந்த உணவு விடுதி ஓமலூர் - மேட்டூர் சாலையில் இருப்பதால், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் இங்கு சாப்பிடு சென்றுள்ளனர். 

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமையன்று ஐந்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் உணவகத்திற்கு வந்த நிலையில், இரவு நேரமாகிவிட்டதால் இளைஞர்கள் கேட்ட உணவு காலி ஆகி விட்டதாக உரிமையாளர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் ஹோட்டல் உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர்களை கிழித்து சேதப்படுத்தி அராஜகம் செய்துள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வந்த காவல்துறையினர் இளைஞர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் ஒரு மணிநேரம் கழித்து திடீரென உணவகம் தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் தீயை அணைத்த நிலையில், உயிர் சேதம் இல்லாமல் ஐந்தாயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் ஆகியுள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை செய்து வரும் நிலையில், அப்பகுதியில் உள்ள தாபாக்களில் இளைஞர்கள் மது அருந்துவது வாடிக்கையாக நடந்து வருவதாகவும், இதனால் பல நேரங்களில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டதாகவும், இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem Hotel Attacked by Anti Social Activities


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal