சேலம் ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு.. கைக்குழந்தையுடன் தம்பதி உட்பட 4 பேர் பத்திரமாக மீட்பு.!
Salem Attur Anaivari Muttal Falls Flood Couple and Child Baby Rescued Safely
ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்றவர்கள், தீடீரென ஏற்பட்ட காற்றாற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட நிலையில், அவர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகேயுள்ள கல்லநத்தம் ஊராட்சி, முட்டல் கிராமம் கல்வராயன் மலை அருகே உள்ளது. இந்த மலைப்பகுதியில் உள்ள ஆணைவாரி நீர்வீழ்ச்சி சுற்றுலாத்தலமாக செயல்பட்டு வருகிறது.
இந்த சுற்றுலாத்தலத்திற்கு தமிழகமெங்கும் உள்ள பல்வேறு மாவட்டங்களை சார்ந்த சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் வந்து குளித்து செல்வது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டு இருந்த படகு சவாரி முகாம், நீர் வீழ்ச்சி போன்ற சுற்றுலா தளங்கள், ஆகஸ்ட் 25 ஆம் தேதி மாவட்ட நிர்வாகத்தால் மீண்டும் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் வகையில் திறக்கப்பட்டுள்ளது.
இன்று வழக்கம்போல சுற்றுலா பயணிகள் அனைவரும் நீரில் குளித்துக்கொண்டு இருந்தனர். கல்வராயன் மலையின் மீது பெய்து வந்த தொடர் மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்து இருந்தது. ஆபத்தான அளவில் நீர் வராத காரணத்தால், வனத்துறையினரும் மக்களை நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதி செய்தனர்.

இந்நிலையில், நீர்வீழ்ச்சிக்கு சென்றிருந்த கைக்குழந்தையுடன் வந்த தம்பதி உட்பட 4 பேர், நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்டனர். இதனையடுத்து, அங்கிருந்த இளைஞர்கள் அவர்களை பத்திரமாக பாறையின் மீது ஏறி அமர வைத்தனர்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. மேலும், நீர்வீழ்ச்சிக்கு வந்து பழகிப்போன சில இளைஞர்கள், நீரில் குதித்து மறுகரையேறி வந்தனர். தற்போது, வனத்துறை நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்லவும், ஏரி முகாமில் படகில் செல்லவும் தடை உத்தரவு விதித்துள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Salem Attur Anaivari Muttal Falls Flood Couple and Child Baby Rescued Safely