திடீர் திருப்பம்.. "இரவு நேரங்களில் வீட்டுக்கு அழைப்பார்"..! "ரஷ்ய பெண்" பரபரப்பு புகார்..!! - Seithipunal
Seithipunal


கலாஷேத்ரா விடுதியில் தங்கிப் பயின்ற ரஷ்ய நாட்டு முன்னாள் மாணவி பரபரப்பு புகார்..!!

ரஷ்யாவை சேர்ந்த முன்னாள் மாணவி ஒருவர் கலாஷேத்ராவில் படித்த போது பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதாக மாநில மகளிர் ஆணையத்தில் புகாரளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கலாஷேத்ராவில் மாணவிகள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்ட புகாரால் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற மாணவிகளின் போராட்டம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாலியல் புகாருக்கு ஆளான பேராசிரியர் ஹரி பத்மன் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் மாநில மகளிர் ஆணையம் தலையிட்டு விசாரணை நடத்தி வரும் நிலையில் கலாஷேத்ராவில் படித்த முன்னாள் மாணவியான ரஷ்யாவை சேர்ந்த பெண் ஒருவர் மாநில மகளிர் ஆணையத்தில் புகாரளித்துள்ளார்.

அந்த புகாரில் கலாஷேத்ராவின் விடுதியில் தங்கி படித்த முதல் ஆறு மாதத்திலேயே தான் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதாக அவர் மின்னஞ்சல் வாயிலாக புகார் அளித்துள்ளார். கலஷேத்ரா கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வரும் பொழுது இரவு 8 மணிக்கு மேல் பேராசிரியர் ஒருவர் அவரின் இல்லத்திற்கு வருமாறு தன்னை கட்டாயப்படுத்தினார்.

அதேபோன்று நடன பயிற்சியின் போது தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் மதிப்பெண்ணை குறைத்து விடுவேன் என மிரட்டுவதோடு தன்னிடம் அட்ஜஸ்ட் செய்து போகவேண்டும் எனவும் நிர்பந்திக்கப்பட்டதாக ரஷ்ய பெண் அளித்திருக்கும் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Russian women complained sexually harassed while studying in Kalashetra


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->