திமுகவுக்கு எதிராக பழைய செய்தியை சித்தரித்து பரப்பிய ஆர்எஸ்எஸ் பிரமுகர் கைது..!! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் சரவண பிரசாத் என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு அரசு பள்ளியில் திமுக நிர்வாகிகள் கள்ள சாராயம் காய்ச்சி கைதானது தொடர்பான நாளேடு செய்தியை வைத்து தற்பொழுது திமுகவினர் அரசுப் பள்ளியில் கள்ளச்சாராயம் தயாரிப்பது போன்று சித்தரிக்கும் வகையில் அந்த செய்தியை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த சித்தரிக்கப்பட்ட செய்தி தொடர்பாக திமுக இளைஞர் அணி அமைப்பாளர் பாலசுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கோவை போலீசார் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் சரவணா பிரசாத்தை கைது செய்துள்ளனர். இதற்கு பாஜக தரப்பிலிருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது. 

பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில் "இன்று சரவணபிரசாத் கைது செய்யப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது கருத்து சுதந்திரத்தை கழுத்தறுக்கும் செயல், ஆளும் அரசின் மமதையை வெளிக்காட்டும் நடவடிக்கை. விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் சகிப்புத்தன்மை இல்லாத திமுக அரசு சாதாரண மனிதர்களை கைது செய்து சாதிக்கப் போவது என்ன? என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

RSS cadre arrested for spreading old news against DMK


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->