போலி என்கவுன்டரில் நான் சுட்டுக் கொல்லப்படலாம்! ரவுடி குள்ள விஷ்வாவின் கடிதத்தால் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்பதூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த குள்ள விஷ்வா என்கிற விஸ்வநாதன் என்பவர் மீது அரசியல் பிரமுகர்கள் கொலை வழக்கு மற்றும் மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் வழக்குகளுக்காக ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார்.

ஆனால் தற்போது அவர் கையெழுத்திடாமல் தலைமைறைவாக இருந்ததால் போலீசார் பிடிவாரண்டுடன் குள்ள விஷாவை சிறப்பு தனி படை அமைத்து தேடி வந்தனர். இதற்கிடையே குள்ள விஷ்வா சுங்குசார் சத்திரம் அருகே பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாரைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அவரை பிடித்து ஸ்ரீபெரும்புதூர் அழைத்து வந்துள்ளனர். அந்த சமயத்தில் சோகண்டி அருகே வந்த போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற போது தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இந்த என்கவுண்டரில் ரவுடி குள்ள விஷ்வா சிறப்பு தனி படை போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். ரவுடி விஷ்வாவின் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த பரபரப்பு அடகுவதற்குள் தான் போலி என்கவுண்டர் செய்ய போவதாகவும், அதற்கு ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசாரே காரணம் எனவும் குள்ள விஷ்வா எழுதிய கடிதம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அந்த கடிதத்தில் "சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றி நீதிமன்றத்தில் கையெழுத்திடச் சென்ற போது என்னிடம் கையெழுத்து வாங்காமல் என்னை சுட்டு விடலாமா என காவல்துறை எஸ்ஐ தயாளன் ஆய்வாளரிடம் பேசியதிலிருந்து என்னை ஆய்வாளர் என்கவுண்டரில் சுட திட்டமிட்டுள்ளதாக அஞ்சுகிறேன். 

எனவே என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் பரந்தாமன் மற்றும் எஸ்ஐ தயாளன் உள்ளிட்ட காவல்துறையினரே பொறுப்பு என்பதை இந்த கடிதத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே என்னை போல் என் கவுண்டரில் சுட்டுக் கொலை செய்ய ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் பரந்தாமன் மற்றும் எஸ்ஐ தயாளன் ஆகியோர் திட்டமிட்டுள்ளது தொடர்பாக தக்க விசாரணை நடத்த வேண்டுகிறேன்" என அந்த கடிதத்தில் குள்ள விஷ்வா என்ற விஸ்வநாதன் கையெழுத்து உடன் கடிதம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rowdy Vishwa wrote letter he may kill by fake encounter


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->