மயிலாடுதுறை : ரவுடி வெட்டிக்கொலை.! மர்ம நபர்களைப் பிடிக்க தனிப்படை தீவிரம்.! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்டத்தில் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் கொண்டல் பகுதியை சேர்ந்தவர் ரவுடி ரெட் தினேஷ். இவர் மீது காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குண்டர் தடுப்பு காவல் சிறையில் ரெட் தினேஷ் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து தற்போது சிறையில் இருந்து வெளியே வந்த ரெட் தினேஷ் நேற்று இரவு கோவில்பத்து பகுதியில் மர்ம நபர்களால் அறிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிர் இழந்த ரெட் தினேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து தினேஷ் அறிவாளால் வெட்டி கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளிகளை பிடிப்பதற்காக மூன்று தனிப்படைகள் அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rowdy murder in mayiladuthurai


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->