எல்பின் நிதி நிறுவன மோசடியில் ஆர்.கே சுரேஷூக்கு தொடர்பு.? போலீசார் தீவிர விசாரணை.!! - Seithipunal
Seithipunal


திருச்சியை தலைமையிடமாகக் கொண்ட எல்பின் நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி பலரிடம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. சுமார் 1,000 கோடி ரூபாய் வரை இந்த நிறுவனம் மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் எல்பின் நிதி நிறுவன மேலாண் இயக்குனரும் பாஜக நிர்வாகியுமான அழகர்சாமி ராஜாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எல்பின் நிறுவன மேலாண் இயக்குனர் அழகர்சாமி ராஜாவிடம் நடத்திய விசாரணையில் அவருக்கும் நடிகரும், திரைப்பட விநியோகித்தருமான ஆர்.கே சுரேஷுக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஆர்.கே சுரேஷ் ஏற்கனவே ஆருத்ரா பண மோசடி வழக்கில் தொடர்பு இருப்பதாக அவருக்கு சமன் அனுப்பப்பட்ட நிலையில் தற்பொழுது வெளிநாட்டில் தலைமுறைக்காக உள்ளார். 

இதன் காரணமாக அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எல்பின் நிறுவன மேலாண்மை இயக்குனர் அழகர்சாமி ராஜாவுடன் ஆர்.கே சுரேஷ் தொடர்பில் இருந்ததால் இந்த வழக்கிலும் ஏதேனும் பண பரிமாற்றம் நடைபெற்று உள்ளதா என்பதை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எல்வின் நிறுவன நிதி மோசடி வழக்கிலும் ஆர்.கே சுரேஷ் ஆஜராக கோரி திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே ஆருத்ரா நிதி நிறுவனம் மோசடி வழக்கில் ஆர்.கே சுரேஷ் ஆஜராகாத நிலையில் எல்பின் நிதி நிறுவன மோசடி வழக்கில் ஆர்.கே சுரேஷ் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக நிர்வாகியும் நடிகருமான ஆர்.கே சுரேஷ் பல்வேறு நிதி நிறுவன மோசடி வழக்கில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது. எனவே மத்திய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு ஆர்.கே சுரேஷை நாடு கடத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RK Suresh linked in Elfin money fraud case


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->