திருத்தணி முருகன் கோவிலில் புனரமைப்பு பணி.. மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேரில் ஆய்வு! - Seithipunal
Seithipunal


திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஒருங்கிணைந்த வளாகத்தில் புனரமைப்பு மற்றும் புதுப்பித்தல் பணிகளை  மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் ஆய்வு செய்தார். 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஒருங்கிணைந்த வளாகத்தில் திருக்கோவில் நிர்வாகத்தால் ரூ.103 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புனரமைப்பு மற்றும் புதுப்பித்தல் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க திருக்கோயில் நிர்வாகிகள் மற்றும் துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தி பேசினார். 

அருள்மிகு திருத்தணி திருக்கோவில் ஒருங்கிணைந்த வளாகத்தில் என்னென்ன வசதிகள் நடந்துட்டு இருக்கு அதை எப்படி இன்னும் மேம்படுத்தலாம் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.கோவில் அமைந்துள்ள இடம் மலைப்பகுதி ஆகும். மேற்பகுதி பாறை நிறைந்த பகுதிகளாக உள்ளன. கொஞ்சம் தொழில்நுட்ப உதவிகளை நாடவேண்டியுள்ளது. அதனால் பல துறை வல்லுநர்கள் ஐஐடியில் இருந்து கியூப் வல்லுநர்கள் வந்து ராக் டெஸ்டிங் எல்லாம் பண்ணி நம்ம கொஞ்சம் கொஞ்சம் பணிகள் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. அவர்களுடைய  குறைகளை நம்மிடத்தில் தெரிவித்தார்கள். அக்குறைகளை நிவர்த்தி செய்யும் விதமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். வாகன நிறுத்துமிடத்தில் தற்போது  700 வாகனங்கள் வரை நிறுத்தலாம், அதை கூடுதலாக வாகனங்களை நிறுத்துவதற்கு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. 

அதுபோல நல்லாட்டூர் பக்கத்துல மூன்று ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதன் மூலம் தண்ணீர் கொண்டு வந்து குடிநீர் வசதி நிறைவேற்றப்பட உள்ளது.அதுபோல கழிவறைகள் எங்கெங்கு தேவை என ஆராய்ந்து என்னென்ன தேவை என்பதை ஆய்வு செய்கிறோம்.ஆட்டோ, பேருந்து வசதி போன்றவை விரைவாக தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.

முன்னதாக திருக்கோவில் ஒருங்கிணைந்த வளாகத்தில் திருக்கோவில் நிர்வாகத்தால் ரூ.103 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புனரமைப்பு மற்றும் புதுப்பித்தல் பணிகளையும், கோவிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருக்க நடைபாதை வியாபாரிகளிடம் கலந்துரையாடி மாற்று இடம் வழங்குவது தொடர்பாகவும்,  பக்தர்கள் அருந்தும் குடிநீர் தொடர்பாகவும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

இதில் திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் கோ.ஸ்ரீதரன், உறுப்பினர்கள் வி.சுரேஷ்பாபு,ஜி.உஷா ரவி, கோ.மோகனன், மு.நாகன், திருக்கோயில் இணை ஆணையர் க.ரமணி, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Renovation work at Thiruthani Murugan Temple District Collector Prathap inspects onsite


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->