நட்ட நடு ரோட்டில் அதிமுக பிரமுகர் வெட்டி கொலை.! வெளியான பகீர் தகவல்.!      - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டியைச் பகுதியில் வசித்து வருபவர் சண்முகவேல் ராஜன், இவர் அந்த பகுதியின் அதிமுகவில் மாணவரணி அவைத் தலைவராக பொறுப்பு வகித்து வந்துள்ளார். 

நேற்றிரவு, தனது வீட்டிலிருந்து வெளியே வந்த  சண்முகவேல் ராஜனை அவரது வீட்டு வாசலில் வைத்து மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது.

தகவலறிந்த சம்பவ இடத்துக்கு வந்த விருதுநகர் கிழக்கு போலீசார், சண்முகவேல் ராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில் அல்லம்பட்டியை சேர்ந்த அருண் பாண்டியன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெட்டி கொலை செய்யப்பட்டார். அதற்கு பழிக்குப்பழியாக சண்முகவேல் ராஜன் கொலை வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும், சண்முகவேல் ராஜனை வெட்டி விட்டு தப்பி ஓடிய கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சதீஷ்குமார், சேர்மராஜ் கைது செய்து விசாரணை நடத்திய போலீசார். இதற்கிடையே, அந்த பகுதியில் கடந்த 2018  ஆம் ஆண்டு முத்துக்காமாட்சி என்பவர் கொலை வழக்கில் சண்முகவேல் முதல் குற்றவாளியாக வழக்கு நடைபெற்று வருகிறது. 

முத்துக்காமாட்சியுடன் ஏற்பட்ட தகாத உறவால் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டு முதலில் முத்துக்காமாட்சி கொலை செய்யப்பட்டுள்ளார். அதன் பிறகு பழிக்கு பழியாக இருதரப்பிலும் சங்கர், அருண்பாண்டியன் உள்ளிட்டோர் மாறிமாறி கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 

தற்போது நான்காவது நபராக கொலையுண்ட சண்முகவேல் முத்துக்காமாட்சி வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவர் என்பதால், இதுவும் பழிக்குப் பழியாக நடந்த கொலையா என பிடிபட்ட சதீஷ்குமார், சேர்மராஜ் இருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

reason for admk member murder


கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
Seithipunal