தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் செயல்படும் நேரங்களில் மாற்றம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் பொருட்கள் விற்பனை செய்யப்படும் நேரங்களை தமிழக அரசு மாற்றியுள்ளது. 

இது குறித்து உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியாகியுள்ள அறிவிப்பில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை 8:30 முதல் மதியம் 12:30 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் 7 மணி வரையிலும் நியாயவிலைக் கடைகள் செயல்படும்.

 

இதர பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் என உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. 

இதற்கு முன்னதாக தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 12.30மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ration shop open time change


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->