பரபரப்பு... திடீரென பழனி கோவிலில் ஆய்வு மேற்கொண்ட அதிவிரைவு படையினர்! - Seithipunal
Seithipunal



கோவையில் மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் 105வது பட்டாலியனில் அதிவிரைவு படையினர் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில் உள்ள பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். 

மேலும் பழனி பகுதியில் உள்ள மசூதிகளில் உள்ள பாதுகாப்பு முறைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். பழநி போலீசாரிடம் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தனர். 

இதனைத் தொடர்ந்து பழனி சரக்கத்தில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்ற அதிவிரைவு படையினர், கடந்த ஒரு ஆண்டுகளாக நடைபெற்ற குற்ற சம்பவங்கள் தொடர்பாகவும் அதில் கைதான குற்றவாளிகளை குறித்தும் கேட்டறிந்தனர்.

வழக்கமாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் அதிவிரைவு படையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வு மேற்கொள்வது பழனி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rapid action force sudden inspection palani temple


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->