அமெரிக்க பெண் போல பழகி, ரூ.3 இலட்சம் சுருட்டல்.. வாலிபர்களே உஷார்.! - Seithipunal
Seithipunal


குவைத்தில் உள்ள ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த வாலிபரிடம், முகநூல் மூலமாக அமெரிக்க பெண் போன்று பழகியவர் 3 லட்சம் பணத்தை சுருட்டி இருப்பது தெரியவந்துள்ளது. 

குவைத் நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் சிவகிரி. இவருக்கு சொந்த ஊர் இராமநாதபுரம். சிவகிரிக்கு முகநூல் மூலமாக அமெரிக்காவை சேர்ந்த கிளாரா என்ற பெண்ணிடம் நட்பு ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து இருவரும் அவ்வப்போது பேசி வந்த நிலையில், நான் தற்போது சென்னையில் தான் இருப்பதாகவும், தனது தந்தையின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு பணம் தந்து உதவுமாறும் கூறியுள்ளார். இதை நம்பி சிவகிரி இணையதளம் மூலமாக பணம் அளித்துள்ள நிலையில், பணம் கிடைத்தவுடன் தனது பேஸ்புக் பக்கத்தை கிளாரா பிளாக் செய்துள்ளார். 

இதனைத்தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சிவகிரி, தமிழக டி.ஜி.பிக்கு இணையதளம் மூலமாக புகார் அளித்துள்ளார். இதையடுத்து, இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அமெரிக்கப் பெண் போல பழகி மோசடி செய்த நபரை தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramanathapuram Youngster Cheated by Fake American Girl Works in Dubai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal