புல்லட்டை திருடி பிழைப்பு நடத்தி வந்த லகுடபாண்டிகள்... சிக்கியது எப்படி?..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிவந்த நபர்களை காவல்துறையினர் மடக்கி அபராதம் வசூல் செய்து வந்தனர். இந்த சமயத்தில், இப்பகுதி வழியாக வந்த புல்லட் இருசக்கர வாகனத்தை மடக்கிய காவல் துறையினர், இவர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர். 

இந்த நிலையில், அபராதம் விதித்ததும் குறுந்தகவல் ஆனது சம்பந்தப்பட்ட நபரின் வாகன உரிமையாளருக்கும், காவல்துறையினருக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்படும். இவர்கள் நீதிமன்றத்தில் அபராத தொகையை செலுத்த வேண்டிய நிலை இருக்கும். 

இந்த புல்லட் வாகனத்திற்கான குறுந்தகவல் திண்டுக்கல்லை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சென்றுள்ளது. மேலும், இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக தனது களவுபோன வாகனத்திலிருந்து அபராத தொகை வந்துள்ளதை அறிந்துள்ளார். 

இதனையடுத்து இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அலைபேசி மூலம் தகவல் தெரிவித்து புகார் அளித்துள்ளார். இது குறித்து சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள கண்காணிப்பு காமிராவை சோதனையிட்ட காவல்துறையினர், அப்பகுதியை சார்ந்த ரஞ்சித் கான் மற்றும் அமீர் சுல்தான் என்பவரை கைது செய்து உள்ளனர். 

இவர்கள் இருவரும் கீழக்கரை பகுதியைச் சார்ந்த நபர்களுடன் சென்னை, கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் என்று ஊர் சுற்றி அதிக விலைகொண்ட வாகனங்களை களவாடி செல்வதை தொழிலாகக் கொண்டு வந்துள்ளனர். மேலும், போலி ஆவணங்களை தயாரித்து குறைந்த விலைக்கு கைமாற்றி வந்ததுள்ளனர். இது குறித்த தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tamil online news Today News in Tamil 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramanathapuram fraud culprit arrest police


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->