#Breaking: தமிழர்களுக்காக உயிரை விடுவதை பெருமையாக நினைக்கிறன்.. வந்துட்டேன் னு சொல்லு.. ரஜினிகாந்த் நெகிழ்ச்சி பேச்சு.! - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டர் பதிவில், " ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு.. வரும் சட்டமன்ற தேர்தலில் மக்களின் பேராதரவுடன் வெற்றிபெற்று, தமிழகத்தில் நேர்மையான, வெளிப்படையான, நாணயமான, ஊழலற்ற, ஜாதி - மதம் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம்.. அற்புதம்.. அதிசியம் கட்டாயம் நிகழும் " என்று தெரிவித்து இருந்தார்.

இதனால் ரஜினியின் அரசியல் வருகை உறுதி செய்யப்பட்ட நிலையில், ரஜினிகாந்தின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகினர். முன்னதாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றது. 

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " நான் கடந்த 2017 ஆம் வருடமே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்தேன். பின்னர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்தேன். மக்கள் மத்தியில் எழுதி வந்தால் மட்டுமே கட்சி ஆரம்பித்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவித்தேன். 

கொரோனாவால் அது முடியவில்லை. எனக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்கையில், நோயெதிர்ப்பு சக்தியை குறைத்து அறுவை சிகிச்சை செய்தனர். இதனால் மருத்துவர்கள் கொரோனா மத்தியில் வெளியே செல்ல கூடாது என தெரிவித்தார்கள். நான் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று இருக்கையில், தமிழர்களின் பிரார்த்தனையால் தான் பிழைத்தேன். 

கொடுத்த வாக்கை என்றைக்குமே நான் மாறமாட்டேன். என்னை வாழவைத்த தெய்வங்கள் தமிழர்கள். இன்று தமிழர்களுக்காக உயிரை விடுவதை பெருமையாக நினைக்கிறன். இப்போது இல்லை என்றால் எப்போதுமே இல்லை. மாற்றத்தை கட்டாயம் கொண்டு வருவேன்.. நான் வந்ததும் மாற்றத்தை கொடுப்பது உங்களின் கையில். அண்ணாத்த திரைப்படம் படப்பிடிப்பு முடிந்ததும், கட்சி செயல்பாடுகளில் முழு வேகத்துடன் இறங்குவேன். நம்மால் முடிந்ததை முயற்சி செய்து, மக்களுக்காக உழைப்பேன். 

ஒவ்வொரு நாட்டிற்கும் தலையெழுத்து உள்ளது. தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய சூழல் வந்தவிட்டது. எல்லாவற்றையும் மாற்றுவோம். அரசியல் மாற்றம் மக்களுக்கானதாக இருக்கும். பல்வேறு விமர்சனங்களை நான் சந்தித்துள்ளேன். இனி மக்களுக்காக உழைக்க விரும்புகிறேன் " என்று தெரிவித்துள்ளார். இதனால் ரஜினியின் அரசியல் பயணம் உறுதியாகியுள்ளது. ரஜினி மக்கள் மன்றத்தின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனும், ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajinikanth Pressmeet Chennai Poes Garden 3 December 2020


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->