விசிக நிர்வாகி மனைவி இறப்பு.. ராஜேந்திர பாலாஜி நேரில் ஆறுதல்.! சொந்த நிதியில் உதவி.!  - Seithipunal
Seithipunal


விசிகவின் இளைஞரணி துணை அமைப்பாளராக இருக்கும் செல்வ மணிகண்டன் என்பவர் சிவகாசி மாவட்டத்தில் பட்டாசு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றார். ஆலமரத்துபட்டி பகுதியைச் சேர்ந்த பி.ஏ. பட்டதாரியான பிரகதி மோனிகா(24 வயது) என்பவருடன் செல்வ மணிகண்டனுக்கு கடந்த ஜூன் 24ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது.

ஊரடங்கு காரணமாக இவர்களது திருமணத்தில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்துகொண்டனர். இதனால் இவர்களாது திருமணம் சமூக வலைதளங்கள் மூலமாக நேரலையில் பகிரபட்டது. திருமண வாழ்க்கை மகிழ்சியாக சென்ற நிலையில், கடந்த சனிக்கிழமை வழக்கம்போல செல்வ மணிகண்டன் வேலைக்கு கிளம்பி சென்றுள்ளார். மதியம் 1.30 மணியளவில் அவர் பிரகதியுடன் பேசியுள்ளார். 

அதன் பின் அவர் போன் செய்த போது, பிரகதி எடுக்கவில்லை எனவே, உறவினரை சென்று வீட்டில் பார்க்கச் சொல்லியுள்ளார். உறவினர் பார்த்தபோது பிரகதி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். பின்னர் , அவர் செல்வ மணிகண்டனுக்கு தகவல் கொடுக்க விரைந்து வந்து மனைவி இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுதார்.

தொடர்ந்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரகதி கழுத்தில் ஒரு சவரன் தங்க நகை அணிந்து இருந்துள்ளார். அந்த நகைக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

இந்நிலையில், சிவகாசி போலீசார் திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டி ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அதே பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரன் (20), டைசன் என்கின்ற சேகர் (19) ஆகியோர் சிக்கியுள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், புதுப்பெண் மோனிகாவை நகைக்காக இவர்கள் இருவரும் கொலை செய்துவிட்டு நகையுடன் தப்பியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், அதிமுக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி தனது சொந்த நிதியில் இருந்து அந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajenthirabalaji helps to family who lost his daughter


கருத்துக் கணிப்பு

ஜனவரி மாதத்தில் பள்ளி, கல்லூரிகள்.,
கருத்துக் கணிப்பு

ஜனவரி மாதத்தில் பள்ளி, கல்லூரிகள்.,
Seithipunal