பெண் பயணி மீது படுக்கை விழுந்த விவகாரம் - ரெயில்வே விளக்கம்.!!
railway department explain bed falling on passenger in palakadu express
சென்னை சென்டிரலில் இருந்து பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் படுக்கை வசதி கொண்ட பெட்டியில் படுக்கை கழன்று விழுந்து இளம்பெண் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தெற்கு ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
"சென்னை சென்டிரலில் இருந்து பாலக்காடு நோக்கி நேற்று சென்றுகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயிலின் எஸ்-5 பெட்டியில் பெண் பயணி ஒருவர் பயணம் செய்தார். இந்த ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தை கடந்த பின்னர் பெண் பயணியின் இருக்கைக்கு மேல் இருந்த நடுப்பகுதி இருக்கை விழுந்ததில் அவர் காயம் அடைந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மொரப்பூர் ரெயில் நிலையத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அந்த பெண் மொரப்பூர் ரெயில் நிலையத்தில் இறங்க மறுப்பு தெரிவித்ததையடுத்து சேலம் ரெயில் நிலையத்தில் இறக்கி, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
உடனே, இந்த சம்பவம் நடந்த பெட்டியில் இருக்கை அமைப்புகளை ரெயில்வே அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த பெட்டியில் மெக்கானிக்கல் தொடர்பான பிரச்சனைகள் எதுவும் இல்லை. பயணிகள் நடுவில் உள்ள படுக்கை வசதியிலான இருக்கையின் சங்கிலியை இணைக்கும் கொக்கியை முறையற்ற முறையில் கையாண்டதாலேயே இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
railway department explain bed falling on passenger in palakadu express