ரயில் பாதைகளில் யானைகள் உயிரிழப்பை தடுக்க புதிய தொழில்நுட்பம், ரயில்வே அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ரயில் பாதையில் யாணைகள் உயிரிழப்பை தடுக்க புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க இருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தமிழகத்துடன் கேரளாவை இணைக்கும் ரயில் பாதையான கோவை பாலக்காடு இடையேயான ரயில் பாதையில் யானைகள் அதிகளவில் ரயிலில் அடிபட்டு உயிரிழக்கிறது. வனப்பகுதியில் உள்ள யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பதை தடுக்கவும், புதிய தொழில்நுபத்தை பயன்படுத்தி தடுப்பு முறைகளை உருவாக்கவும் ரயில்வே துறைக்கு உத்தரவிட வேண்டும் என கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பு சார்பில் பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இது குறித்து ரயில்வே மற்றும் வனத்துறை பதிலக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி வனத்துறை தாக்கல் செய்த அறிக்கையில் கோவையிலிருந்து பாலக்காடு செல்லும் வழித்தடத்தில் 490 ஏக்கர் பரப்பில் யானைகள் வசிக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த வழித்தடத்தில் ஞானிகள் பலியாவதை தடுக்க கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது புதியதாக 4 கண்காணிப்பு கோபுரங்கள் விரைவில் நிறுவப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் கோவை பாலக்காடு ரயில் பாதையில் யானைகள் நடமாட்டத்தை கண்டறிந்து முன்கூட்டியே ரயிலின் வேகத்தை குறைக்கும் வகையில் ரயில் ஓட்டுநர்கள் எச்சரிக்கும் தடுப்பு அமைப்புகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து உத்தரவிட்ட பசுமை தீர்ப்பாயம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் யானைகள் நடமாட்டத்தை முன்கூட்டியே கண்டறிவது சாத்தியமாகுமா என்றும், அதை நடைமுறைப்படுத்த எவ்வளவு கால அவகாசம் தேவை என்பது குறித்தும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வரும் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Railway crossing new technology


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->