மக்களைத் தெரு நாய் என்கிறாரால் ராகவா லாரன்ஸ்? சர்ச்சை பேச்சால் வெடித்த விவாதம்! - Seithipunal
Seithipunal


நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அரசியல் வருகை குறித்த பல்வேறு யூகங்களுக்கு மத்தியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். தாம் அரசியலுக்கு வர வேண்டுமா இல்லையா என்பது குறித்து மக்களிடம் கருத்துக்கேட்டு சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்ததாக அவர் கூறினார். அதற்குச் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்ட மக்களிடமிருந்தும் நேர்மறையான பதில்களும், தான் அரசியலுக்கு வர வேண்டும் என்ற விருப்பங்களும் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதனால், விரைவில் தனது தாய் மூலமாகவும், ரசிகர்களை ஒருங்கிணைத்தும் ஒரு நல்ல முடிவை முறைப்படி அறிவிக்கவிருப்பதாக அவர் சூசகமாகக் குறிப்பிட்டுள்ளார்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த லாரன்ஸ், தவெக அரசின் கடந்த ஒரு மாதகால ஆட்சி நிர்வாகம் மிகவும் சிறப்பாகவே அமைந்துள்ளது என்று பாராட்டினார். குறிப்பாக, பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இயங்கி வந்த டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடுவதற்கு எடுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றார். மேலும், பள்ளிக்கல்வித்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்களின் செயல்பாடுகள் பாராட்டும் வகையில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஒரு புதிய அரசு என்பதால் அவர்களுக்குப் போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றார். எதிர்க்கட்சிகள் தவெக மீது வைக்கும் விமர்சனங்கள் அனைத்தும் வெறும் பொறாமையின் காரணமாகவே எழுகின்றன என்றும், தவெகவை விமர்சிப்பதற்கு முன்பாக தாங்கள் ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தோம் என்பதை அவர்கள் சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும் என்றும் சாடினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஒரு புதிய பகுதிக்கு வாடகை வீட்டிற்குச் செல்லும்போது வெளியிலிருந்து பார்க்க வீடு நன்றாகத் தெரிந்தாலும், உள்ளே சென்ற பிறகே அங்குள்ள உண்மையான பிரச்சினைகள் தெரியவரும் என்ற உவமையைக் கூறினார். அங்கு புதிதாகச் செல்பவர்களைப் பார்த்துத் தெருநாய்கள் குரைக்கும் போது, அதற்குப் பிடித்த பிஸ்கட்டுகளையோ அல்லது சில நாய்கள் எதிர்பார்க்கும் பிரியாணியையோ கொடுத்துக் கத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார். ஒரு சிறிய வீட்டையும் நாயையும் சமாளிப்பதற்கே இவ்வளவு சிரமங்கள் இருக்கும் போது, ஒரு மாநிலத்தையே நிர்வகிக்கும் தவெக அரசுக்கு மக்கள் மாற்றத்திற்கான நேரத்தைக் கொடுக்க வேண்டும் என்று லாரன்ஸ் விவரித்தார். தவெக அரசின் செயல்பாடுகளை விளக்குவதற்குத் தெருநாய்களை உவமையாகக் காட்டி அவர் பேசிய இந்த விசித்திரமான பேச்சு தற்பொழுது இணையவாசிகள் மத்தியில் கடுமையான கண்டனங்களைப் பெற்றுள்ளதுடன், பெரும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Raghava Lawrence Hints at Political Entry Sparks Controversy with Street Dog Analogy Supporting TVK


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->