அத்துமீறிய நாட்டிய புள்ளிங்கோ.. அலேக்காக தூக்கிய காவல்துறை.! போலீசாரிடம் கதறிய சம்பவம்.! - Seithipunal
Seithipunal


இளம்பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வரம்பை மீறி செயல்பட்ட நாட்டிய புயல் டிக் டாக் போராளி இளைஞரை கைது செய்ய அதிகளவு கோரிக்கை எழுந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசித்து வரும் இளைஞரின் பெயர் கண்ணன். இவர் தன்னகத்தே பல திறமைகளை ஒளித்துவைத்து கொண்டு, வெளிக்கொணர இயலாமல் திணறி வந்துள்ளார். 

இதனையடுத்து இவருக்கு நல்ல ஒரு வழிகாட்டியாக கேடுகெட்ட டிக் டாக் சாவகாசம் கிடைக்கவே, இதில் பல விடீயோக்களை பார்த்து தானும் வீடியோ செய்து பதிவிடலாம் என்ற ஆர்வம் வந்துள்ளது. இதன்பின்னர் தனது திறமையை வெளிப்படுத்துவதாக நினைத்து பேருந்து நிலையம், சாலைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீடீரென மக்களை பதறவைத்து நாடியமடி வந்துள்ளான். 

இதனால் பல போக்குவரத்து ஸ்தம்பிப்பு, பொதுமக்கள் இடையூறு, பெண்களை அச்சுறுத்தல் போன்ற பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பவே மக்கள் கொந்தளித்துள்ளனர். மேலும், டிக் டாக் புகழ் ஜி.பி.முத்துவையே நாடியத்தான் கண்ணன் எரிச்சல் அடைய செய்துள்ளான். இவனை காவல் துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  

அவரது நடவடிக்கைகள் போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கும் பெண்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த இளைஞரின் செயல் ஏற்கனவே டிக் டாக்கில் கோலோச்சி பிரபலமாக உள்ள ஜி.பி.முத்துவுவையே எரிச்சல் அடைய வைத்துள்ளது.

இதற்கிடையே சாலைகளிலும் பொது இடங்களிலும் பெண்கள் மற்றும் முதியவர்களை அச்சுறுத்தும வகையிலும் அதிர்ச்சி அளிக்கும் வகையிலும செயல்படும் டிக்டாக் கண்ணன் மீது நடவடிக்கை எடுத்து அவர் இனி இது போல் செயல்படாத வண்ணம் தடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இது தொடர்பான செய்திகளும் அடுத்தடுத்து வெளியானது. 

இதனையடுத்து இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கருக்காக்குறிச்சி பகுதியை அடுத்துள்ள ராஜாகுடியிருப்பு பகுதியை சார்ந்த கல்லூரி மாணவர் என்பது தெரியவந்துள்ளது. பின்னர் வடகாடு காவல் துறையினர் மாணவர் கண்ணனை கைது செய்த நிலையில், இவரின் மீது பொது இடங்களில் அநாகரீகமாக நடப்பது, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தது, பொதுமக்களை அச்சுறுத்தியது போன்ற வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.  

இவர் கல்லூரியில் பயின்று வரும் மாணவர் என்ற காரணத்தால், இவரின் எதிர்காலம் கருதி மாணவரை விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேலும், இனி இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். இவரது டிக் டாக் பக்கத்தில் இருந்த வீடியோ காட்சிகள் நீக்கப்பட்ட நிலையில், இவருடன் இணைந்து வீடியோ பதிவு செய்த நபர்களின் விடியோக்கள் இணையத்தில் உலா வந்து கொண்டு இருக்கிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

puthukottai tic tok pullingo arrest by police


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->