மாட்டுவண்டியில் ஊர்வலம்.. மணமக்கள் செய்த செயலால் அசந்துபோன மக்கள்!  - Seithipunal
Seithipunal



பொள்ளாச்சி அருகே 5 கி.மீ தூரம் திருமணமான புதுமண தம்பதியினர் ஒன்றாக மாட்டு வண்டியில் பயணம் செய்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.

அந்த காலத்தில் திருமணம் முடிந்தவுடன், மணமக்கள் மாட்டு வண்டிகளில் பயணம் செய்து ஊர்வலமாக தங்களது வீட்டிற்கு செல்வர். இப்படி அனைத்து பயன்பாட்டிலும் மாட்டு வண்டிகள் முக்கியத்துவம் பெற்று இருந்தது.குறிப்பாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் 35 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாட்டு வண்டிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வந்தன.

ஆனால் காலப்போக்கில் அவை எல்லாம் மறைந்து வருகிறது. அத்துடன் காளை மாடுகள் குறித்துவிழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் இப்போது ஒரு சில கிராமங்களில் தங்கள் பாரம்பரியத்தை மறக்காமல் மாட்டு வண்டிகளை பயன்படுத்தி வருகின்றனர்.மேலும் ஒரு சில இளைஞர்கள் தங்கள் திருமணத்தின் போது பழமையை மறக்காமல் மாட்டு வண்டியில் பயணம் செய்வதை இப்போதும் விரும்புகிறார்கள்.

இந்த நிலையில் பொள்ளாச்சியை சேர்ந்த வாலிபர் தனது திருமணம் முடிந்தவுடன் புது மனைவியுடன் மாட்டுவண்டியில் அமர வைத்து சென்றுள்ளார். பொள்ளாச்சி அருகே உள்ள அர்த்தநாரிபாளையத்தை சேர்ந்தசிவப்பிரகாஷ் என்பவருக்கும் , கோவையை சேர்ந்த காவியா என்பவருக்கும் நேற்று பொள்ளாச்சி அடுத்த கரட்டு மடத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் மணமகன், தனது புதுமனைவியை தனது பூர்வீக வீடான அர்த்தநாரிபாளையத்திற்கு மாட்டு வண்டியிலேயே பயணம் செய்தனர்.

கரட்டு மடத்தில் இருந்து அர்த்தநாரிபாளையம் வரையிலும் 5 கி.மீட்டர் தூரத்துக்கு மணமகனே மாட்டு வண்டியை ஓட்டி சென்றார். திருமணமான புதுமண தம்பதியினர் ஒன்றாக மாட்டு வண்டியில் பயணம் செய்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Procession on the bullock cart The people are amused by the actions of the bride and groom


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->