ஜனவரி 2 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை! எதற்கு தெரியுமா?
Prime Minister Modi visit Tamil Nadu January 2
பிரதமர் நரேந்திர மோடி ரூ. 951 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள திருச்சி விமான நிலையத்தை திறந்து வைக்க வைக்க ஜனவரி 2 ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி விமான புதிய முனையம் ஒரே சமயத்தில் சுமார் 2900 பயணிகள் வந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் சுமார் 75 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

48 பயணிகள் வருகை மையங்கள், 10 போர்டிங் பாலங்கள் என பல்வேறு வசதிகளுடன் பயணிகளின் வருகையை மேம்படுத்துவதற்காகவும் எளிமையாக்கவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய முனைய கட்டத்திற்கான பணி கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி திருப்பூரில் காணொளி மூலம் தொடங்கி வைத்தார்.
இந்த விரிவாக்க திட்டத்தில் புதிய ஒருங்கிணைந்த பயணிகள் முனைய கட்டடம், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம், கூட்டணி குறைப்பதற்கான நவீன வசதிகள் போன்றவை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
English Summary
Prime Minister Modi visit Tamil Nadu January 2