திருவாரூர் வரும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு! ஏற்பாடுகள் தீவிரம்!
President Droupadi Murmu thiruvarur
திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 10வது பட்டமளிப்பு விழா வரும் செப்டம்பர் 3 அன்று நடைபெற உள்ளது.
இந்த விழாவில் இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக பங்கேற்பார் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
விழாவில் கலந்து கொள்ளும் குடியரசு தலைவர், பட்டம் பெறும் மாணவ, மாணவிகளுக்கு நேரடியாக பட்டங்களை வழங்க உள்ளார்.
கடந்த ஆண்டு மோசமான வானிலை காரணமாக குடியரசு தலைவரின் வருகை கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் அவர் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டு, நிர்வாகம் இதை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.
English Summary
President Droupadi Murmu thiruvarur