கோவையில் விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்..!
Power loom owners withdraw strike in Coimbatore
கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த 33 நாட்களுக்கு மேலாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூலி உயர்வு தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் எந்த முடிவும் எடுக்க முடியாமல் தோல்வியில் முடிந்தது. அதனை தொடர்ந்து, கடந்த 15-ஆம் தேதி முதல் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் 12 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர். இந்த காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் இன்று வரை தொடர்ந்தது.

இந்நிலையில் கோவை மற்றும் திருப்பூரில் நடந்து வந்த விசைத்தறி உரிமையாளர்கள் உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து நாளை பொதுக்குழுவை கூட்டி விசைத்தறியை இயக்குவது குறித்து முடிவெடுப்போம் என விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Power loom owners withdraw strike in Coimbatore