5 பாட்டில் மதுபானத்தால் மடிந்த 21 வயது வாலிபர்...! பந்தயத்தின் விபரீதம்...!
21 year old dies after drinking 5 bottles of alcohol tragedy racing
கர்நாடக கோலார் மாவட்டத்தில் 21 வயது ஆன 'கார்த்திக்' என்ற வாலிபர் தனது நண்பர்களான வெங்கட ரெட்டி, சுப்ரமணி உள்ளிட்ட 5 பேரிடம் மதுவில் தண்ணீர் கலக்காமல் 5 முழு பாட்டில் மதுபானத்தை பந்தையமாக குடிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வெங்கட ரெட்டி, கார்த்திக்கிடம் ரூ.10,000 பந்தயம் கட்டியுள்ளார். இதைத்தொடர்ந்து 5 பாட்டில் மதுபானத்தை குடித்த உடனே கார்த்திக்கின் உடல் நிலை படு மோசமானது.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்த்திக் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும், கார்த்திக்கிற்கு திருமணமாகி ஒரு வருடமே ஆகும் நிலையில், அவருக்கு 8 நாட்களுக்கு முன்பு தான் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
அதுமட்டுமின்றி, கார்த்திக் உயிரிழந்தது தொடர்பாக வெங்கட ரெட்டி, சுப்ரமணி உள்ளிட்ட 6 பேர் மீது நங்கலி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும்,இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர், மற்றவர்களை காவலர்கள் வலைவீசி தேடி வருகின்றனர்.
English Summary
21 year old dies after drinking 5 bottles of alcohol tragedy racing