கவர்னர் கையில் அதிகாரம்! புதிய அரசு அமையாததால் நிர்வாகப் பணிகளை கையில் எடுத்த ஆளுநர்...! - Seithipunal
Seithipunal


தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பரபரப்பும், பரஸ்பர கணக்குப் போர்களும், அதிகாரப் போட்டிகளும் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், புதிய அரசு அமைப்பது இன்னும் உறுதியற்ற நிலைக்குள் சிக்கித் தவித்து வருகிறது.மே 4-ம் தேதி வெளியான சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், ஆட்சியமைப்பில் அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனைகளிலும் மறைமுக நகர்வுகளிலும் ஈடுபட்டு வருகின்றன.

இதனால் தமிழக அரசியல் அரங்கமே பரபரப்பான திரைக்கதையைப் போன்ற சூழலுக்குள் நகர்ந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில், அன்றாட நிர்வாக நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தமிழக ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அர்லேகர் நேரடியாக நிர்வாக செயல்பாடுகளை கண்காணிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, ஆளுநரின் அறிவுறுத்தலின் பேரில் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதாக லோக் பவன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரிகளுக்கு உடனடியாக பிளஸ்-2 தேர்வு முடிவுகளை வெளியிடுமாறு அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கல்வித்துறை அமைச்சர் பதவியேற்கும் வரை முடிவுகளை நிறுத்திவைப்பது, மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை நடவடிக்கைகளை பாதிக்கும் என்பதால், மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு எந்த தாமதமும் இன்றி தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அரசியல் குழப்பங்களுக்கிடையிலும் மாணவர்களின் கல்வி பயணம் தடைப்படாமல் தொடர வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Power hands Governor Governor took over administrative work new government not formed


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->