பழிக்கு பழி - சென்னையில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை.! மர்மக் கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு.!  - Seithipunal
Seithipunal


பழிக்கு பழி - சென்னையில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை.! மர்மக் கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு.! 

சென்னையில் உள்ள பெருங்களத்தூர் காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி பெரி வெங்கடேசன். இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில், கொலை, கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து, அடிதடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

சமீபத்தில், பாஜகவில் இணைந்த இவர் தற்போது முடிச்சூர் மண்டலம் எஸ்.சி, எஸ்.டி பிரிவு தலைவராக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில், வெங்கடேசன் பழைய பெருங்களத்தூர் குட்வில் நகர் பகுதியில் உள்ள முட்புதரில் முகங்கள் சிதைக்கப்பட்டு வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இன்று பிணமாக கிடந்தார். 

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்தப் புகாரின் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் இந்தக் கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், நேற்று இரவு அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட மர்ம கும்பல், வெங்கடேசனை கொலை செய்து உடலை முட்புதரில் வீசி சென்றதும், கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் வெங்கடேசன் முக்கிய குற்றவாளியாக இருந்தால் அதற்கு பழிவாங்கும் விதமாக அவரை தீர்த்துக் கட்டியதும்" தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய கும்பலை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

popular rowdy murder in chennai perungalathur


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->