பூரிக்கு இப்படி மட்டும் கிழங்கு ரெடி பண்ணுங்க - அவ்ளோதான் கொஞ்சம் கூட மீறாது.!!
poori kizhangu recepie
தேவையான பொருட்கள்:
* உருளைக்கிழங்கு
* தண்ணீர்
* மல்லி
* சோம்பு
* சீரகம்
* மிளகு
* எண்ணெய்
* பட்டை
* கிராம்பு
* ஏலக்காய்
* பிரியாணி இலை
* சீரகம்
* வெங்காயம்
* இஞ்சி பூண்டு பேஸ்ட்
* பச்சை மிளகாய்
* தக்காளி
* மஞ்சள் தூள்
* பெருங்காயத் தூள்
* காஷ்மீரி மிளகாய் தூள்
* உப்பு
* மாங்காய் தூள்
* தண்ணீர்
* கரம் மசாலா
* கசூரி மெத்தி
* கொத்தமல்லி
செய்முறை:-
* முதலில் உருளைக்கிழங்குகளை வேகவைத்து எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு, மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* இதையடுத்து ஒரு மிக்சி ஜாரில் மல்லி, சோம்பு, சீரகம், மிளகு சேர்த்து பொடித்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சீரகம் சேர்த்து தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* தொடர்ந்து அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், தக்காளியை சேர்த்து வதக்கி மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், உப்பு, மாங்காய் தூள், அரைத்த பொடியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும். கொத்தி வந்ததும் அதில், மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, கரம் மசாலா சேர்த்து கிளறி கொதிக்க வைக்க வேண்டும்.
* கடைசியாக அதில் கைகளால் நசுக்கிய கசூரி மெத்தி மற்றும் கொத்தமல்லியை தூவி கிளறி இறக்கினால், சுவையான உருளைக்கிழங்கு மசாலா தயார்.