அய்யா! குளத்தை காணுங்க.! திருவாரூரை அதிர வைத்த சம்பவம்!  - Seithipunal
Seithipunal


திருவாரூர் அருகே குளத்தை காணவில்லை என சுவரொட்டி ஒட்டப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் நகராட்சி பகுதியில் 74 குளங்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த குளங்களில், பல குளங்கள் சமூக விரோதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குளங்களுக்கு வரக்கூடிய நீர்வழிப் பாதையும் ஆக்கிரமிப்பாளர்களால் தடைபட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், திருவாரூர் நகராட்சி 25வது வார்டு பகுதியில் பயன்பாட்டில் இருந்த செட்டி குளத்தை காணவில்லை என, நகராட்சி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த சுவரொட்டியில், "குளத்தை காணவில்லை, திருவாரூர் நகராட்சி , 25வது வார்டு புள்ளத்தெரு தெருவில் 4வது பிளாக், 7 டிஎஸ் நம்பர் 375/1ஏ செட்டி குளத்தை காணவில்லை. இங்ஙனம், மைலியம்மன் கிராம மக்கள் பொது நல சங்கம்,
புள்ளத்தெரு, மேட்டுப்பாளையம், திருவாரூர்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் தெரிவிக்கையில், "நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்த செட்டிகுளத்தில். இந்த பகுதி பொதுமக்கள் குளிப்பதற்கு மட்டுமின்றி குடிநீர் தேவைக்காகவும் பயன்படுத்தி வந்தனர். தற்போது அந்த குளம் ஆக்கிரமிப்பாளர்களால் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு, பொது பாதையாக அது பயன்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி அதிகாரிகள் இந்த இடத்தை மீண்டும் குளமாக உருவாக்கி பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும்" என அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pool missing in thiruvarur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->