பெரியார் பேசியதை விட பொன்முடி பெரிதாக பேசவில்லை.. சொல்கிறார் அழகிரி!
Ponmudi did not speak more than Periyar Says Alagiri
எடப்பாடி பழனிசாமியின் முடிவால் அந்த கட்சி தொண்டர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. அ.தி.மு.க. சிதைந்து கொண்டு இருக்கிறது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
பழனியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-இந்திய எல்லைக்குள் வாழ்பவர்கள் அனைவரும் இந்தியர் என மகாத்மா காந்தி கூறினார். அவர்களை மத ரீதியாக பிரிக்க மாட்டேன் என்றும் தெரிவித்தார்.
ஆனால் இன்று துணை ஜனாதிபதியோ உச்சநீதிமன்ற நீதிபதியை அச்சுறுத்தும் வகையில் பேசி வருகிறார்.
ஜனநாயகத்தில் குடியரசு தலைவர் உள்பட யாரை வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். கவர்னருக்கு எதிரான வழக்கை கொண்டு சென்று இந்தியாவுக்கான தீர்ப்பை முதல்-அமைச்சர் ஸ்டாலின் பெற்றுத் தந்துள்ளார்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி என்பது எழுச்சி இல்லாத கூட்டணியாக உள்ளது. எடப்பாடி பழனிசாமியின் முடிவால் அந்த கட்சி தொண்டர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. அ.தி.மு.க. சிதைந்து கொண்டு இருக்கிறது. ஆனால் தி.மு.க. கூட்டணியில் அது போன்ற பிரச்சினை இல்லை.
2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு கூடுதல் இடங்கள் கேட்போம்.அந்த தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியே வெற்றி பெறும். அமைச்சர் பொன்முடி பேசியது தவறானது.. பெரியார் பேசியதை விடவா பொன்முடி பேசி விட்டார். இதை எதிர்கட்சிகள் அரசியலாக்கி வருகின்றனர்.
சவுக்கு சங்கர் வீட்டில் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. ஆனால் அதற்கும் காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகைக்கும் எந்த தொடர்பும் இல்லை.அழகிரி இவ்வாறு கூறினார்.
English Summary
Ponmudi did not speak more than Periyar Says Alagiri