10 ஆம் வகுப்பு படித்துவிட்டு, லட்சக்கணக்கில் சம்பாதிப்பது எப்படி?.. நாடகக்காதல் கோஷ்டிஸ் புது ஐடியா..! - Seithipunal
Seithipunal


தனிமையில் எடுத்த புகைப்படத்தை வைத்து காதலி மற்றும் காதலியின் தந்தையை மிரட்டிய காமுகன் கைது செய்யப்ட்டுள்ளான். 

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள திருபுவனை பகுதியை சார்ந்த கல்லூரி மாணவி முகநூல் செயலியில் கணக்கை தொடங்கியுள்ளார். இவருக்கு செங்கல்பட்டை சார்ந்த கார்த்திக் என்பவன் நட்பு பட்டியலில் அறிமுகமாகியுள்ளான். 

முதலில், கார்த்திக்கும் கல்லூரியில் படித்து வருவதாக தெரிவித்த நிலையில், இதனை நம்பிய மாணவியிடம் அவனுடன் பேசி வந்து பின்னாளில் காதலில் விழுந்துள்ளார். இதனையடுத்து இருவரும் தனிமையில் சந்திக்கும் அளவிற்கு காதலித்துள்ளனர். 

இதன்போது, காமுகன் கார்த்திக் 10 ஆம் வகுப்பு மட்டுமே பயின்றுள்ளதும், மாணவியை காதலி ஏமாற்ற வேண்டும் என்ற திட்டத்தோடு பழகி வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து மாணவி அவனிடம் இருந்து பிரிந்து வந்த நிலையில், தனிமையில் இருந்ததை புகைப்படம் எடுத்து வைத்துள்ளான். 

இதனைக்காண்பித்து மாணவியை மிரட்டி வந்த நிலையில், மாணவியின் செயல்கபாடுகளை கவனித்த அவரது தந்தை விசாரிக்கையில் உண்மை தெரியவந்துள்ளது. இதன்பின்னர், மகளின் எதிர்காலம் கருதி அவரை விட்டுவிடக்கூறி காமுகனிடம் பெண்ணின் தந்தை கெஞ்சவே, அவன் அவரிடமும் பணம் கேட்டு மிரட்டியுள்ளான். 

ஒரு சமயத்தில் இருவரும் இவனது தொல்லை தாங்க முடியாது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து காமுகன் கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இதுபோன்ற பல நாடகக்காதல் சோகங்கள் தொடர்ந்து அரங்கேறி வந்தாலும், பெண்கள் அடுத்தடுத்து நாடக காதலில் விழுவதும் சிக்கி பல சோகத்தை சந்திப்பதும் தொடர்கதையாகியுள்ளது. அவனை திருந்தச்சொல் என்ற போலி புரட்சியை பேசாமல், நீங்கள் புரிந்துகொண்ட செயல்படுங்கள் என்பதே உங்களின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் வழியாக இருக்கும்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pondicherry girl Threatening by Drama Love Culprit Chengalpattu Karthick Police Arrest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->