தமிழ்நாட்டில் 48,800 வாக்குச்சாவடிகளில் 3ம் கண்.. அதிகாரி தகவல்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய உள்ளதால் தேர்தல் நடத்தும் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முழு வீட்டில் செயல்பட தொடங்கியுள்ளனர். 

இன்று மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்தால் வழக்கு பதிவு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் தமிழக முழுவதும் உள்ள 44 ஆயிரத்து 800 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் நாளை மாலை 6 மணி வரை தபால் வாக்குகளை பதிவு செய்யலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சிறையில் இருக்கும் கைதிகள் சிறை கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்று தபால் வாக்குகள் செலுத்தலாம் என  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Polling booths under Webcame surveillance in tamilnadu


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->