புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு தொல்லை - போலீஸ்காரர் பணியிடை நீக்கம் - Seithipunal
Seithipunal


புகார் அளிக்க வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பெரம்பூர் அடுத்து செம்பியம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் வினோத்குமார்(32). இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணமான இளம் பெண் ஒருவர் நிலத்தகராறு தொடர்பாக காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்துள்ளார். இந்த புகாரை விசாரித்து போலீஸ்காரர் வினோத்குமார், இளம்பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கி வைத்துக்கொண்டு அடிக்கடி ஆபாச குறுந்தகவல் அனுப்பி வந்துள்ளார்.

இதனை இளம்பெண் கணவரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து இளம் பெண்ணின் கணவர், வினோத்குமாரை வீட்டிற்கும் வரும்படி மனைவியின் செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்பியுள்ளார். இதைத் தொடர்ந்து இளம் பெண்ணின் வீட்டிற்கு வந்த வினோத்குமார், இளம் பெண்ணின் கணவரை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து வினோத்குமாருக்கும், இளம்பெண்ணின் கணவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து இளம் பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரையடுத்து உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து போலீஸ் ஏட்டு வினோத் குமாரை பணியிடை நீக்கம் செய்து புளியந்தோப்பு துணை கமிஷனர் உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Policeman suspended for sexually harassing a young woman in chennai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->