திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரை தனிப்படை போலீசார் தாக்குவதை வீடியோ எடுத்த சக்தீஸ்வரனுக்கு போலீஸ் பாதுகாப்பு..! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றியஅஜித்குமார் என்பவர் நகை திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டு போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது தனிப்படை போலீசார் தாக்கியதில் கடந்த 29-ந்தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.

குறித்த ளைஞர் போலீஸ் விசாரணையின் போது அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் தனிப்படை போலீஸ்காரர்களான பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், அஜித்குமாரை தனிப்படை போலீசார் தாக்கும் காட்சியை வீடியோ எடுத்த சக்தீஸ்வரனுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. வெளிமாவட்ட போலீசார் பாதுகாப்பு வழங்க கோரி டிஜிபிக்கு ஆன்லைனில் சக்தீஸ்வரன் மனு அளித்திருந்தார். அதன்படி, துப்பாக்கி ஏந்திய 02 போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். 

இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில், அஜித்குமாரின் விவகாரத்தில் போலீசாருக்கு உத்தரவிட்ட அந்த உயர் அதிகாரி யார்? என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police protection for Saktheeswaran who filmed the assault of Thiruppuvanam youth Ajithkumar by special forces


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->