கணவனை கண்டுபிடித்து தர கோரிய மனைவி. சடலமாக மீட்கப்பட்ட கணவன்.. காவல்துறையினர் தீவிர விசாரணை..! - Seithipunal
Seithipunal


மாயமான செயற்பொறியாளர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். இவர் வடசென்னை அனல்மின் நிலையத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாளராக பணியாற்றி வருகிறார்.இவர்  அதிகாரிகளின் அரசு குடியிருப்பில் தங்கி வேலை பார்த்து வருகிறார். வார இறுதிகளில் மட்டுமே வீட்டிற்கு சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை அதிகாரிகள் ஹரிகிருஷ்ணனின் மனைவிக்கு போன் செய்து ஹரிகிருஷ்ணன் வீட்டுக்கு வந்துள்ளாரா என கேட்டுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி இளவரசி வேலைக்கு சென்றுள்ளார் வீட்டிற்கு வர வில்லை என அதிகாரிகளிடம் தெரிவித்தார். அதிகாரிகள் வேலைக்கு வந்தவரை திடீரென காணவில்லை என இளவரசியிடம் தெரிவித்தனர்.

இதனை கேட்ட உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், ஹரிகிருஷ்ணன் எழுதியதாக காவல்நிலையத்தில் அதிகாரிகள் கடிதம் ஒன்றை கொடுத்தனர். அதில்,

பணி சுமை அதிகமாக இருப்பதால் மன அழுத்தம் தாங்காமல் இருப்பதாகவும் பணியை மேற்கொள்ள முடியவில்லை எனவும் குடும்பத்தாருடனும் என்னால் நேரம் செலவழிக்க முடியவில்லை  எனவே எனது குடும்பத்தை விட்டு பிரிகிறேன் இதற்கு யாரும் காரணமில்லை என எழுதி ஹரிகிருஷ்ணன் கையெழுத்திட்டிருந்தார்.

இதனிடையே இரண்டாவது மாடியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருப்பதாக காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.விரைந்து வந்த  காவல்துறை அங்கு சென்று பார்த்த போது அவரின் சடலம் இருப்பதை உறுதி செய்தனர்.

அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், அந்த கடித்ததில் இருக்கும் கையெழுத்து ஹரிருஷ்ணனுடையது இல்லை என அவரது குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police investigation about Death of Youth in Chennai


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->