திமுகவின் ஆபாச பேச்சாளருக்கு ஆப்பு... சென்னை காவல் ஆணையரிடம் ஆளுநர் மாளிகை புகார்..!! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என் ரவி பாதியில் வெளியேறிய விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதனை அடுத்து ஆளுநரை திரும்ப பெற கோரி திமுக எம்பிக்கள் குடியரசு தலைவரிடம் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து விளக்கம் அளிக்க ஆளுநர் ஆர்.என் ரவி 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என் ரவிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் திமுகவைச் சேர்ந்த ஆபாச பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியுள்ளார்.

சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரை ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்திருந்தார். இந்த நிலையில் தமிழக ஆளுநர் மாளிகை சார்பில் சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த புகார் மனுவில் "தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என் ரவி உரை நிகழ்த்திய போது பேப்பரில் எழுதிக் கொடுத்தபடி படித்திருந்தால் அவர் காலில் பூ போட்டு அனுப்பி இருப்போம். ஆனால் தமிழக சட்டப்பேரவையில் இந்தியாவுக்கு சட்டத்தை எழுதிக் கொடுத்த எங்கள் முப்பாட்டன் அம்பேத்கர் பெயரை சொல்ல மாட்டேன் என்று சொன்னால் ஆளுநரை செருப்பால் அடிக்கும் உரிமை எனக்கு உள்ளது. அரசியலமைப்பு சட்டத்தை சொல்லித்தானே பதவியேற்றார்" என பேசி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் திமுகவை சேர்ந்த பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சொல்ல முடியாத ஆபாச வார்த்தைகளால் ஆளுநரை திட்டி இருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் அவர் மீது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 124, 1870ன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ஆளுநர் மாளிகையில் துணைச் செயலாளர் பிரசன்னா ராமசாமி சார்பாக சென்னை பெருநகர் காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் சார்பில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் தற்போது ஆளுநர் மாளிகை சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police complaint against DMK speaker for speak obscenely about Governor Ravi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->