மருத்துவமனையில் பாலியல் தொல்லை - நோயாளியின் புகாரில் சிக்கிய மருத்துவர்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள வில்லிவாக்கம் சிட்கோ நகரை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. 

இந்த நிலையில் அந்த பெண் தற்போது 50 நாட்கள் கருவுற்று உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அந்தக் கருவை கலைக்க முடிவு செய்து கணவருடன் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். 

அங்கு அந்த இளம்பெண் சிகிச்சை முடிந்து நேற்று இரவு டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு சென்று தனது கணவரிடம் மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவர் இளங்குமரன் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கணவர் சம்பவம் தொடர்பாக வில்லிவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி மயக்கவியல் மருத்துவர் இளங்குமரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிகிச்சைக்கு சென்ற பெண்ணுக்கு மருத்துவர் பாலியல் தொந்தரவு அளித்த விவகாரம் நோயாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

police case file on doctor for harassment in chennai


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->