ஐநாக்ஸ் வைரல் வளர்மதி மீது வழக்கு! 'ஏ' படம் விடுதலைக்கு குழந்தையுடன் சென்ற விவகாரம்! - Seithipunal
Seithipunal


விருகம்பாக்கத்தில் உள்ள ஐநாக்ஸ் திரையரங்கில் 'ஏ' சான்று வழங்கப்பட்ட விடுதலை திரைப்படத்தை, குழந்தைகளுடன் பார்க்க அனுமதிக்குமாறு வாக்குவாதம் செய்த வளர்மதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பொது இடத்தில் இடையூறு செய்தல், அத்துமீறி உள்ளே நுழைதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வளர்மதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஸ்டெர்லைட் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தனி ஆளாக குரல் எழுப்பி வந்த வளர்மதி, மத்தியில் ஆள கூடிய பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களையும், துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு விநியோகித்து அடிக்கடி கைதாகி, விடுதலையாவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

தற்போதைய திமுக ஆட்சி காலத்தில் இதேபோல் போராட்டம் செய்ய முயன்று கைது செய்யப்பட்டதால், ஆத்திரமடைந்த வளர்மதி திமுக அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார்.

பல மாதங்களாக எந்த பிரச்சனையிலும் தலையிடாமல் இருந்த வளர்மதி நேற்று முன்தினம் திரையரங்கில் வெளியான வெற்றிமாறனின் 'ஏ' சான்று வழங்கப்பட்ட விடுதலை திரைப்படத்தை குழந்தைகளுடன் பார்க்க, விருகம்பாக்கத்தில் உள்ள ஐநாக்ஸ் திரையரங்கிற்கு சென்றுள்ளார்.

அப்போது காவல்துறைக்கு அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் வளர்மதியிடம் விசாரணை மேற்கொண்டனர். அதற்கு வளர்மதி, "எங்களுடைய குழந்தையை நாங்கள் எந்த படத்தை பார்க்க வைக்க வேண்டும் என்று பெற்றவர்களுக்கு தெரியும். நீங்கள் அதை கூற வேண்டாம்.

ஐட்டம் சாங் என்ற பெயரில் அரைகுறை ஆடைகளுடன் ஆபாசமாக ஆடுவதை பெற்றோர்கள் தங்களது குழந்தையுடன் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். அதைத்தான் முதலில் தடை செய்ய வேண்டும். இது போன்ற படங்களை குழந்தைகளுடன் பார்க்க கூடாது என்று நீங்கள் தடை விதிக்கக்கூடாது" என்று போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இது குறித்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police case file against valarmathi for viduthalai movie


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->