இது தமிழ்நாடா? கர்நாடகாவா? காவிரி போராட்டத்தில் விவசாய சங்க தலைவரை தாக்கிய காவலரால் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தண்ணீர் திறந்து விடாததால் டெல்டா மாவட்டங்களில் சுமார் 3.5 லட்சம் ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி நாசமாகி உள்ளன. தமிழகத்திற்கு சேர வேண்டிய பங்கு நீரை திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்து தமிழக முழுவதும் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். 

அதன் தொடர்ச்சியாக இன்று நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கர்நாடகா அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கருகியில் நெற்பயிர்களை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

இதனால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விவசாயிகளை தடுத்து நிறுத்தியதால் போலீசார்க்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனையும் மீறி காரைக்காலில் இருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்ற பயணிகள் ரயிலை தடுத்து நிறுத்திய விவசாயிகள் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். 

அவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்று அப்புறப்படுத்தியது அடுத்து ரயில் புறப்பட்டு சென்றது. போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட போது காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் காவேரி தனபாலனை போலீசார் ஒருவர் கீழே தள்ளிவிட்டு அடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கீழ்வேளூர் ரயில்வே கேட் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து நாகை டிஎஸ்பி பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

விவசாய சங்க தலைவரை தாக்கிய காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்ததை அடுத்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டதை அடுத்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து விவசாயிகளையும் கைது செய்த போலீசார் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். 

காவிரிநீருக்காக போராடிய விவசாய சங்க தலைவரை காவல் துறையினர் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என கர்நாடகா விவசாயிகள் பலகட்ட போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக கர்நாடக அரசு செயல்பட்டு வருகிறது ஆனால் நாகையில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க தலைவரை காவலர் தாக்கிய சம்பவம் இது கர்நாடகாவா? தமிழ்நாடா? என்ற கேள்வி எழுவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police attacked farmers union leader in nagai cauver protest


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->