ஆதம்பாக்கத்தில் வீட்டிலேயே சவுக்கு சங்கரை கைது செய்த காவலர்கள்...!
Police arrested Savukku Shankar at his home Adambakkam
அரசியல் விமர்சனங்களால் அடிக்கடி கவனம் ஈர்க்கும் பிரபல யூடியூபராக திகழ்பவர் சவுக்கு சங்கர். தனது யூடியூப் சேனல் மூலம் அரசியல், ஆட்சி நிர்வாகம், அதிகார மையங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைத்து வரும் இவர், சமூக வலைதளங்களில் பெரும் ஆதரவும் விமர்சனங்களையும் ஒரே நேரத்தில் சந்தித்து வருகிறார்.
இந்த நிலையில், யூடியூபர் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்துள்ளனர். திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரை மிரட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கே சென்று போலீசார் அவரை கைது செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, தனது கைது குறித்து சவுக்கு சங்கர் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தொடர்பாக, பினாமி பெயர்களில் சொத்துகள் வாங்கி பல கோடி ரூபாய் முதலீடுகள் செய்துள்ளதாக நேற்று தான் வெளியிட்ட தகவல்களுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கைது நடவடிக்கை அரசியல் மற்றும் சமூக வலைதள வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, விவாதங்களுக்கு தீப்பொறியாக மாறியுள்ளது.
English Summary
Police arrested Savukku Shankar at his home Adambakkam