மகளை கொலை செய்த கள்ளகாதலன்..!! தாயும் உடந்தையாக இருந்த அவலம்..!! - Seithipunal
Seithipunal


கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த மகளை கொலை செய்த தாயை காவல்துறையினர் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கோரிபாளையத்தில் வசித்து வருபவர் ரங்கேஸ்வரன். இவருக்கு திருமணமாகி விஜயலெட்சுமி என்ற மனைவியும் வித்யா, விக்னேஷ் என்ற இரு பிள்ளைகளும் உள்ளனர்.

கடந்த சிலவருடங்களுக்கு முன்னர் ரங்கேஸ்வரன் இறந்துள்ளார். இந்நிலையில், விஜயலெட்சுமிக்கு வெற்றிவேல் என்ற அவரது உறவினருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளகாதலாக மாறியுள்ளது.

வெற்றிவேலுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதால். உறவினர்கள் இவர்கள் பழகுவதை கண்டித்துள்ளனர். இதனை அடுத்து விஜயலெட்சுமியின் மகளை வெற்றிவேல் தாக்கியுள்ளார்.

இதனால் அந்த சிறுமி உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து உடலை கல்லணை கால்வாயி; வீசியுள்ளனர். இதற்கு விஜயலெட்சுமியும் உடந்தையாக இருந்துள்ளார்.இதனை அடுத்து அந்த சிறுமியின் இறந்த புகைபடத்தை வெளிநாட்டில் வேலை செய்யும் தனது மனைவிக்கு வெற்றிவேல் அனுப்பி வைத்துள்ளார்.

.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் தனது உறவினர்களிடம் கூறியுள்ளார். அவர்கள் அளித்த புகாரின் பேரில்  விசாரணை நடத்திய காவல்துறை இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police arrested a woman and man due to killing 7years girl child


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->