போலி ரசீது கொடுத்து பல லட்சம் மோசடி... வங்கியை முற்றுகையிட்ட விவசாயிகள்... தலைமறைவான நகைமதிப்பீட்டாளர்களுக்கு வலைவீச்சு..! - Seithipunal
Seithipunal


போலி ரசீதை வழங்கி பொதுமக்களிடம் பணமோசடியில் ஈடுப்பட்ட மதிப்பீட்டாளர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம், மங்களூரு பகுதியில் கனரா வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் அந்த சிறுப்பாக்கம், மங்களூர், அடரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

இந்த வங்கியில் நமச்சிவாயம் (59) மற்றும் அவரது மகன் சங்கரன் (37) ஆகியோர் நகைமதிப்பீட்டாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இந்த வங்கியில் ராஜேஷ் என்பவர் மேலாளராக வேலை செய்து வருகிறார். இவர் உடல்நல குறைவால் அடிக்கடி விடுமுறை எடுத்து வந்துள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்த முயன்ற நகைமதிப்பீட்டாளர்கள் போலி ரசீது கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, நகைகடனுக்கு வட்டி கடன் செலுத்த வந்த வாடிக்கையாளர்களிடம் பணத்தை வாங்கி கொண்டு அதனை வரவு வைக்காமல் வங்கியில் வழங்கப்படும் ரசீது போல போலி ரசீதையும் கொடுத்து மோசடி செய்துள்ளனர். நகையை மீட்க வருபவர்களிடம் மேலாளர் இல்லை  வந்ததும் நகையை பெற்றுகொள்ளுமாறும் கூறியுள்ளனர்.

இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள் வங்கியை முற்றுகையிட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களை சமாதானம் செய்தனர். இந்த சம்பவம் குறித்து வங்கி மேலாளர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் தலைமறைவாக உள்ல நகைமதிப்பீட்டாளர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.அ


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police are searching for a jeweler who gave a fake receipt and manipulated the money


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->