‘‘ சுக்கா... மிளகா... சமூகநீதி?’’ தேர்வு.. 260 பேர் 100 விழுக்காடு மதிப்பெண் பெற்று வெற்றி.!! - Seithipunal
Seithipunal


பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், " சமூகநீதி, இட ஒதுக்கீடு ஆகியவை குறித்து மக்களிடமும், இளைஞர்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் ‘‘ சுக்கா... மிளகா... சமூகநீதி?’’ என்ற தலைப்பில் சமூகநீதித் தொடர் ஒன்றை பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவரது முகநூலில் எழுதி வருகிறார். பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் துணை அமைப்புகளின் நிர்வாகிகள் இந்தத் தேர்வுகளை எழுத வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. சுக்கா... மிளகா... சமூகநீதி? தொடரில் மொத்தம் 50 அத்தியாயங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் இரு அத்தியாயங்களுக்கு ஒரு தேர்வு வீதம் மொத்தம் 25 தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிவித்திருந்தார்.

அதன்படி முதல் இரு அத்தியாயங்களுக்கான முதல் தேர்வு 31.07.2020 அன்று காலை நடைபெற்றது.  தேர்வு நேரம் 20 நிமிடங்கள் ஆகும். மொத்தம் 20 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. இந்தத் தேர்வில் மொத்தம் 4402 பேர் ஆன்லைன் வழியாக கலந்து கொண்டனர். அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் அனைத்து வினாக்களுக்கும் விடையளித்துள்ளனர். தேர்வில் 2845 பேர் 50 விழுக்காட்டுக்கும் கூடுதலான மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.  50% முதல் 100% வரை மதிப்பெண் பெற்றவர்களின் விவரம் வருமாறு:

50% வரை மதிப்பெண் பெற்றவர்கள் - 1558 பேர்

55 முதல் 60% மதிப்பெண் பெற்றவர்கள் - 419 பேர்

65 முதல் 70% மதிப்பெண் பெற்றவர்கள் - 547 பேர்

75 முதல் 80% மதிப்பெண் பெற்றவர்கள் - 604 பேர்

85 முதல் 90% மதிப்பெண் பெற்றவர்கள் - 697 பேர்

95% மதிப்பெண் பெற்றவர்கள் - 318 பேர்

100 மதிப்பெண் பெற்றவர்கள் - 260 பேர்

தமிழக அரசியல் வரலாற்றில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்திய அரசியல் வரலாற்றிலும் பயிலரங்கம் அமைத்து அரசியல் பாடங்களை கற்பித்தது பாட்டாளி மக்கள் கட்சி தான். இப்போது சமூகநீதி குறித்து மக்களிடமும், இளைஞர்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சமூகநீதி குறித்து மருத்துவர் அய்யா அவர்கள் எழுதிய அரிய தகவல்கள் பொதிந்த கட்டுரைகளை படிக்கச் செய்து, அதனடிப்படையில் தேர்வுகள் நடத்தி மதிப்பெண் வழங்கும் புதிய வழக்கத்தை பாட்டாளி மக்கள் கட்சி உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டு அரசியலில் இது ஓர் ஆக்கப்பூர்வமான முயற்சி ஆகும். முதல் தேர்வை 4403 எழுதியுள்ள நிலையில் இனிவரும் தேர்வுகளை இன்னும் கூடுதலான எண்ணிக்கையிலானவர்கள் எழுதுவர் என எதிர்பார்க்கப்படுகிறது " என்று கூறப்பட்டுள்ளது..

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PMK Online test about OBC Reservation


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->