" யகாவா ராயினும் நாகாக்க " குறளை மேற்கோள்காட்டி பேசிய மருத்துவர் இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


" யகாவா ராயினும் நாகாக்க " என்ற குறளை மேற்கோள்காட்டி பேசிய மருத்துவர் இராமதாஸ், திமுகவினர் நாவை அடக்கி பேச வேண்டும் என்று கூறினார். 

தர்மபுரி தொகுதி வேட்பாளர் எஸ்.பி வெங்கடேஸ்வரனை ஆதரித்து, தர்மபுரியில் மருத்துவர் அய்யா அவர்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதன்போது பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் பேசுகையில், " நாக்குக்கு பல வல்லமை உள்ளது. திமுகவை சார்ந்தவர் தமிழக முதல்வர் அவரின் தாயாரை வாய்க்கூசும் வார்த்தையால் பேசி இருக்கிறார். இது பேச்சா? இப்படியெல்லாம் பேசுவதா?. தர்மபுரிக்கும் - எனக்குமான உறவு தாய்க்கும் - சேய்க்குமான உறவு. இந்த மண் எனக்கு மிகவும் பிடித்த மண்.

கண்ணகி, ஆண்டாள், திரௌபதி ஆகியோரை தெய்வமாக நாம் வணங்குகிறோம். பெண்களுக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கும் நாடு. என்னைப்பற்றி எதுவேண்டும் என்றால் கூறு, எனது தாயைப்பற்றி கூறாதே என்று கூறும் நாடு இது. திமுகவை சார்ந்தவர் மிகக்கேவலமாக பேசியிருக்கிறார். 

ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது திமுகவாக இருக்கலாம். ஆனால், அதற்காக பல போராட்டங்களை நான் நடாத்தியுள்ளேன். மருத்துவர் அன்புமணி பல திட்டங்களை தர்மபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக வைத்துள்ளார். இந்த தொகுதி வெற்றித்தொகுதி. தர்மபுரியில் உள்ள 5 தொகுதியிலும் அதிமுக மற்றும் பாமக, அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அமோக வெற்றிபெற நாம் உழைக்க வேண்டும். 

இந்த தர்மபுரி மாவட்டம் பின்தங்கிய மாவட்டம், பின்தங்கிய மக்கள் உள்ள பகுதி. சாந்தை என் தொகுதி மக்கள் சாப்பிட வேண்டுமா?. அன்றைய காலத்தில் கற்றாழை வைத்து பிழைப்பு நடத்தி வந்தார்கள். இன்று அந்நிலை கொஞ்சம் மாறியுள்ளது. திருப்பூர், கோவை மாவட்டத்தை போல தருமபுரி மாவட்டம் வளர்ச்சியடைய, அதிமுக கூட்டணி வெற்றியடைய வேண்டும். 

தமிழக முதல்வர் நாம் வளர்ச்சிக்கான கூறும் திட்டங்களை அமல்படுத்துகிறார். அதனால் அதிமுக தலைமையிலான கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும். எஸ்.பி வெங்கடேஸ்வரன் மிகவும் பண்புள்ள எளிமையான மனிதர். அனைவருக்காகவும் பாடுபடுவர். நமது முன்னோர்கள் வாழ்ந்த காலங்களில், அருகில் உள்ள வீடுகளில் வறுமை இருந்தால், அவர்கள் வீட்டில் சமைத்ததை வழங்கி தனது சுற்றுப்புறத்தையும் ஒருதாய் மக்களாக அரவணைத்து வாழ்ந்தார்கள். 

அன்றைய காலத்திலும் பல மாதங்கள் இருந்தது. அதையும் தாண்டி அன்பு இருந்தது. அன்பான, பண்பான வேட்பாளரை உங்களுக்கு வழங்கியுள்ளோம். அவரை மாம்பழ சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் " என்று பேசினார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Ramadoss Speech about DMK 30 March 2021 TN Election 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->