எனது மூத்தபிள்ளை காடுவெட்டி ஜெ.குரு இல்லை என்றாலும்., மருத்துவர் இராமதாஸ் தேர்தல் பிரச்சாரம்.!
PMK Dr Ramadoss Memorize about Kaduvetti J Guru TN Election 2021
எனது மூத்தபிள்ளை காடுவெட்டி ஜெ.குரு என்னுடன் இல்லை என்ற வருத்தம் இருந்தாலும், வேட்பாளராக கே.பாலு அவர்களை நிறுத்தியுள்ளோம். அவரை வெற்றியடைய செய்வோம் என்று மருத்துவர் இராமதாஸ் பேசினார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2021 ஜெயங்கொண்டம் தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலு அவர்களை ஆதரித்து, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த பிரச்சார கூட்டத்தில் மருத்துவர் இராமதாஸ் பேசுகையில், " எனது மூத்தபிள்ளை மாவீரன் காடுவெட்டி ஜெ.குரு என்னுடன் இல்லை என்ற வருத்தம் இருந்தாலும், உங்களிடம் வேட்பாளராக கே.பாலு அவர்களை நிறுத்தியுள்ளோம். அற்புதமான வேட்பாளர் கே.பாலு. கே.பாலுவின் வெற்றி உறுதிசெய்யப்பட்டுவிட்ட வெற்றியாகும். இந்த கூட்டத்தை பார்த்தாலே அது புரிகிறது.

கே.பாலுவின் வெற்றிக்காக உழைத்துவரும் கூட்டணி கட்சியினருக்கும், பாட்டாளி சொந்தங்களுக்கும் பாராட்டுக்கள். அதிமுக அரியலூர் மாவட்ட நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், இளைஞரணி மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர், பாமக நிர்வாகிகள், வன்னியர் சங்க செயலாளர், அரியலூர் மாவட்ட செயலாளர், பாஜக மாவட்ட தலைவர், ஒன்றிய தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மூவேந்தர் முன்னேற்ற கழகம் மற்றும் கூட்டணி கட்சியினருக்கு அனைவருக்கும் வணக்கம்.
அனைவரும் அதிமுக கூட்டணியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும். 234 தொகுதியிலும் அதிமுக கூட்டணி அமோக வெற்றியடைய வேண்டும். அதிமுக தலைமையிலான கூட்டணி மிகசிறந்த கூட்டணி " என்று பேசினார்.
Tamil online news Today News in Tamil
தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
PMK Dr Ramadoss Memorize about Kaduvetti J Guru TN Election 2021