என்னை எதிர்க்க ஸ்டாலினுக்கு தைரியம் இருக்கா?.. - மரு. அன்புமணி உச்சகட்ட எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் அரசியல்களத்தில் என்னை எதிர்த்து பார்க்கட்டும். கோழைபோல செயல்பட கூடாது என மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பரபரப்பாக பேசினார்.

பண்ரூட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் இரா.இராஜேந்திரனை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பேசுகையில், " மு.க ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் அரசியல்களத்தில் என்னை எதிர்த்து பார்க்கட்டும். 

கோழைபோல மாவீரனின் பிள்ளைகளை வைத்து ஏன் சூழ்ச்சி செய்கிறீர்கள்?. எனது வாழ்நாளில் இப்படி பேசியது கிடையாது. இன்று அவ்வுளவு கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுளேன். பொறுக்கியை உருவாக்கியதில் எனக்கும் ஒரு பங்கு இருக்கிறது. அவனை நம்பி ஏமார்ந்துள்ளோம். 

சீட்டுக்காக யாரை வேண்டும் என்றாலும் திட்டுவான். நாளை கூட்டணி மாறி மு.க ஸ்டாலினையே திட்டுவான். அவனுக்கு பணம் மட்டும் தான் முக்கியம். அவனிடம் உள்ள இளைஞர்களை கூட நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் வாழ வேண்டும். அவனுடன் யாரும் சேராதீர்கள். அவன் ஒரு தீய சக்தி. இவனை விட கேவலமான வேட்பாளர் யாருமே தமிழகத்தில் இருக்கமாட்டார்கள். பண்ரூட்டி தொகுதி மக்கள் புரிந்துகொள்ளுங்கள். அவனின் அரசியலுக்குக் இந்த தேர்தலோடு சாவுமணி அடிக்க வேண்டும். 

அவன் கொடுக்கும் 500, 1000 த்திற்கு ஆசைப்பட்டால் உங்களின் வாழ்க்கையே நாசமாக போய்விடும். உங்களின் வீடு, வீட்டு பெண்கள், எதிர்காலம் என அனைத்தையும் நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள். நமது வேட்பாளர் அவரின் சொத்தை பலருக்கும் தானமாக வழங்கியுள்ளார். பிறரின் சொத்துக்களை அவர் அபகரித்ததில்லை. எதிரணி வேட்பாளர் உங்களை மிரட்டி அட்டூழியம் செய்து, உங்களின் எதிர்காலத்தை சீரழித்துவிடுவார். நீங்கள் அனைவரும் மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள். கவனமாக இருங்கள். கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Anbumani Warn MK Stalin 30 March 2021 Panruti Election Campaign


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->