பாகிஸ்தான் பீரங்கித் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர் முரளி நாயக்! அன்புமணி இராமதாஸ் வீரவணக்கம்! 
                                    
                                    
                                   PMK Anbumani Ramadoss Indian  Army Man Death 
 
                                 
                               
                                
                                      
                                            நாட்டைக் காக்கும் போரில்  வீர மரணம் அடைந்த இந்திய வீரர் முரளி நாயக்கிற்கு வீரவணக்கம் செலுத்தியுள்ள அற்பமாக தலைவர் அன்புமணி இராமதாஸ், இராணுவத்திற்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில்  பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த  இந்திய இராணுவ வீரர் முரளி நாயக், பாகிஸ்தான் நடத்திய தொடர் பீரங்கித் தாக்குதலில் வீரமரணம் அடைந்தார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. 
நம்மைக் காப்பதற்காக  இன்னுயிரை ஈந்த அந்த பெருமகனுக்கு  எனது வீரவணக்கங்களை செலுத்துகிறேன்.
 பயங்கரவாதிகளின் புகலிடமாகத் திகழும் பாகிஸ்தான் இந்தியா மீது அப்பட்டமாக பயங்கரவாதத் தாக்குதல்களை ஏவி விட்டு வருகிறது. 
அவற்றிலிருந்து நாட்டையும், நம்மையும் காக்கும் புனிதப் பணியில், தங்களின்  உயிரைப் பணயம் வைத்து  நமது படைவீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.  மிகவும்  நெருக்கடியான இந்தக் காலக்கட்டத்தில்  நாம் அனைவரும் ஒன்றுபட்டு அவர்களுக்கு துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
                                     
                                 
                   
                       English Summary
                       PMK Anbumani Ramadoss Indian  Army Man Death